#ndamendment
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்குச் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாகச் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று காலை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இச்சட்டமூலத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர் இன்று காலை அவையின் நடவடிக்கைகள் ஆரம்பமானபோது இத்தீர்மானத்தை அறிவித்தார்.

#22ndAmendment
September 22, 2026 at 6:48 AM
"“இலங்கையின் நீதித்துறையில் மோசமான தலையீடு செய்து அதன் சுதந்திரத்தை பாதிக்கச் செய்த தரப்புகளுடன் சேர்ந்து நீதிச் சுதந்திரத்தை பாதுகாக்க போராடுவது என்ற பெயரில் நான் நடிப்பதற்கு தயார் இல்லை" - எம்.ஏ. சுமந்திரன்

#22ndAmendment
September 18, 2026 at 9:55 AM
உத்தேச அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சர்வஜன அதிகாரம், ப்ரீ லோயர்ஸ் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளன. அதேபோல, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக என்பவரும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

#22ndAmendment
August 18, 2026 at 1:36 PM
May 26, 2026 at 11:05 AM